×

‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் இருக்க வேண்டும்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விருப்பம்

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல், “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி சென்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இதனால் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதைக்கண்டு பயந்துதான் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியை பாஜ தகுதி நீக்கம் செய்யும் செயலில் ஈடுபட்டது.

உச்ச நீதிமன்றம் ராகுலின் தண்டனையை நிறுததி வைத்ததால் ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி மீட்கப்பட்டது. சர்வாதிகார போக்கில் செயல்படும் பாஜ அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள ‘இந்தியா‘ கூட்டணியின் முக்கிய நோக்கம். 2024 மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பாக ராகுல் காந்தி போட்டியிட வேண்டும். இதில் கூட்டணி கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். சட்டீஸ்கரில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை எதிர்த்து போராடுவதான் காங்கிரசுக்குள்ள மிகப்பெரிய சவால்’’ என்றார்.

The post ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் இருக்க வேண்டும்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,PM ,India' ,Chhattisgarh ,Chief Minister ,Bhupesh Bagal ,New Delhi ,Rahul Gandhi ,India' alliance ,2024 Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி...